இளைய தளபதி விஜய் என்றாலே சாதனைகளை முறியடிப்பவர் தானே. நேற்று மாலை அனைவரும் எதிர்ப்பார்த்த பைரவா டீசர் வெளிவந்தது.
டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பேஸ்புக், டுவிட்டர் என அனைத்தும் ஸ்தம்பித்தது, பைரவா வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றது.
தற்போது 1.3 லட்சம் லைக்ஸுகளை தாண்டி கலக்கி வருகின்றது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு பைரவா டீசர் மிகவும் பிடித்துவிட்டதால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் டீசர் எந்த இடத்திலும் கதையை கணிக்க முடியாத படி உள்ளது, படத்தில் இரண்டு விஜய்யா? என்று ஒரு குழப்பம் நீடிக்கின்றது.
பரதன் என்றாலே வசனம் தான் பேமஸ், அந்த வகையில் ‘நீ வசூல் மன்னனா?’ என்று கேட்க விஜய் ‘அப்படித்தான் ஊருக்குள்ள சொல்றாங்க’ என சொல்லும் இடம் தியேட்டரே அதிரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
0 comments:
Post a Comment